Skip to content

News

பெருமைமிகு ஆன்மிகப் பயணத்தின் தொடக்கம்

Claretian Missionaries (கிளரீஷியன் மிஷனரீஸ்) என்பது கத்தோலிக்க திருச்சபையில் உள்ள ஒரு மறைப்பணி துறவற சபை ஆகும்.

இவர்கள் புனித அந்தோனி மரியா கிளாரட் (St. Anthony Mary Claret) அவர்களால் 1849ஆம் ஆண்டு ஸ்பெயினில் தொடங்கப்பட்டனர். கிறிஸ்தவ நற்செய்தியை மக்களிடம் கொண்டு செல்வது, கல்வி, சமூகப் பணி, ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்களுக்கு உதவுதல், ஆன்மிக வழிகாட்டுதல் போன்ற பணிகளில் உலகின் பல நாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Claretian Missionaries என்பது நற்செய்திப் பணியையும், கல்வி மற்றும் சமூக சேவையையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு உலகெங்கும் பணியாற்றும் கத்தோலிக்க மறைப்பணி சபையாகும்.

Claretian Missionaries (கிளரீஷியன் மிஷனரீஸ்) சபையில் இணைந்துள்ள இவர், தனது ஆன்மிகப் பயணத்தின் முக்கியமான முதலாவது திருநிலைச் சடங்கை நிறைவு செய்துள்ளார்.

இந்த அர்ப்பணிப்புமிக்க பயணம் இறைப்பணிக்கான ஒரு சிறப்பான தொடக்கமாக அமைகிறது.

அமரர் அமிர்தநாதன் அவர்களின் பேரனும், ஆசிரியர் அமிர்தநாதன் ரோபர்ட் கெனடி அவர்களின் மகன் இரணைதீவைப் பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் எமது சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் விடயமாகும்.

எமது உறவுக் கிராமங்களிலிருந்து இப்படியான இளம் பிள்ளைகள் ஆன்மிகப் பணிகளிலும், கல்வியிலும், பல்வேறு துறைகளிலும் முன்னேறிச் செல்வது எமது சமூகத்திற்கும் எமது உறவுகளுக்கும் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்றது.

இவரைப் போன்றே எமது உறவுகளின் பிள்ளைகள், சிறுவர்கள் அனைவரும் தங்களுக்குப் பிடித்த துறைகளில் சிறப்பாகக் கல்வி கற்று, உயர்ந்து, சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ளவர்களாக விளங்க வேண்டும் என்பதே எமது ஆவலும் எதிர்பார்ப்பும் ஆகும்.

குருத்துவப் பணியில் மட்டுமல்லாது, கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம், நிர்வாகம், சமூகப்பணி என அனைத்து துறைகளிலும் எமது பிள்ளைகள் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எங்களது இதயப்பூர்வமான வாழ்த்தாகும்.

இறைவனின் அருளும் வழிகாட்டுதலும் இவரது ஆன்மிகப் பயணத்தில் என்றும் துணையாக இருக்கட்டும்.

🙏 எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🙏

✴️✝️கோபுரதீவின் வாரிசுகளின் புதிய அருட்சகோதரன்✝️✴️
🌟✝️கோபுரதீவின் வாரிசுகளின் இரணைமாதாநகர் மண்ணின் மைந்தனாகிய திரு,திருமதி, றொபேட் கெனடி , தம்பதியரின் புதல்வர்
✝️🔅 றொபட் ஸ்ரலின் (லக்ஸசன்) அவர்கள்
🔅கிளறேசியன் சபையில் முதல் நிலை வாக்குத்தத்தம் வழங்கி திருநிலைப்படுத்தப்பட்டார்,
🔅அருட்சகோதரன் ,றொபட் கெனடி,ஸ்ரலின்,(லக்ஸ்சன்,)
🔅அவர்களுக்கு
வாரிசுகள் சார்பாக செபங்களையும் வாழ்த்துக்களையும் கூறி நிற்கின்றோம்,🌟💥🌻🌹🌹🌻

பெரிய வெள்ளிக்கிழமை சிலுவைப்பாதை

புனித லூர்து மாதா தேவாலயத்தில் சிலுவைப்பாதை எங்கே சுமந்து போறீர் என்ற பழைய பாரம்பரிய வழிபாட்டு மரபில் நடைபெறும் கடந்த 37 வருடங்களாக விமரிசையாக நடைபெறும் இப்பக்தி முயற்சியில் பங்கு கொண்டு பயன் அடையலாம் வாருங்கள்

கனடாவில் கடந்த 37 வருடங்களாக பெரியவெள்ளிக்கிழமை காலையில் 8.30 பது மணிக்கு தமிழில் சிலுவைப்பாதை நடைபெறும்

பெரி வியாழக்கிழமை இரவு 11.00 மணிக்கு செவ்வியல் நற்கருணை சந்திப்பு ஆராதனை தமிழில் நடைபெறும்

குறிப்பு இந்த வருடம் ஆடிமாதம் 20ம் திகதி தமிழ் மக்களின் மிட்லன் வருடாந்த யாத்திரை நடைபெறும்