Facebook Post
யாழ். அருட்பணி. அன்ரனி பெர்னாண்டோ பெனற் அடிகளார் இறைவனடி சேர்ந்தார் – 06.09.2026
யாழ். மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்பணி. அன்ரனி பெர்னாண்டோ பெனற் அடிகளார் இறைவனடி நேற்று ஞாயிற்றுக்கிழமை 06.09.2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அமரத்துவம் அடைந்த அருட்பணி. அன்ரனி பெர்னாண்டோ பெனற் அடிகளார் 1989ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் மயிலிட்டி, இளவாலை, பரந்தன் பங்குகளின் உதவிப் பங்குத்தந்தையாகவும் சண்டிலிப்பாய் பங்கின் பதில் பங்குத்தந்தையாகவும் கரவெட்டி, மானிப்பாய், கிளிநொச்சி, பருத்தித்துறை, பரந்தன் பங்குகளின் பங்குத்தந்தையாகவும் ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குநராகவும் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநராகவும் கிளிநொச்சி, பருத்தித்துறை மறைக்கோட்டங்களின் முதல்வராகவும் வவுனியா செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமிலும் பணியாற்றியுள்ளார்.
அருட்தந்தையின் பணிவாழ்விற்காக நன்றிகூறி அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்னார் மறைமாவட்டம் சார்பாக செபங்களை சமர்ப்பிக்கின்றோம்.
கணிமதி (AI) மூலம் தயாரித்து சிறீதரனும், கந்தையா பாஸ்கரனும் தமது முகநூல் பக்கங்களில் பதிவிட்டுள்ள இந்தப் படங்களைப் பார்க்கும் போது எங்கேயோ இடிக்கிற மாதிரி உங்களுக்கு இல்லையா?
எனக்கு என்றால் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுகிற கதை தான் ஞாபகத்துக்கு வருகுது. 
தேசிய கத்தோலிக்க இளையோர் ஞாயிறு திருப்பலி எமது திருத்தலத்தின் இளையோர் ஒன்றியத்தினரால் சிறப்பிக்கப்பட்டது.(06.09.2026)
குருத்துவ தின நல் வாழ்த்துக்கள் 04.09.2026.
இறை அன்பின் நிழலில் இனிமையாய் மலர வாழ்த்துகள்!அருட்பணி வின்சன் பற்றிக் அடிகளார் அவர்களுக்கு,
இறைவனின் பேரன்பும், அளப்பரிய அருளும் உங்களை வழிநடத்தும் இந்த நன்னாளில், உங்களுக்கு சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஊடகம் சார்பாகவும், இறைமக்கள் சார்பாகவும் இதயங்கனிந்த குருத்துவ தின நல் வாழ்த்துகளை இறை அன்போடு சமர்ப்பிக்கின்றோம்.
அன்பையும், கருணையையும், வழிகாட்டுதலையும் உங்கள் இறைப்பணியின் மூலம் தொடர்ந்து வழங்கி வரும் உங்களை, இறைவன் மேலும் பல ஆசீர்வாதங்களால் நிரப்ப வேண்டுகிறோம்.
இறைவன் உங்களுக்கு நல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும், நீடித்த ஆயுளையும் தந்தருளட்டும்.
நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு இறைப்பணியிலும் தேவ ஆவியின் வழிநடத்துதலும், தடைகளற்ற வெற்றியும் தொடரட்டும்.உங்களது வார்த்தைகளினாலும், சேவையினாலும் இறைவன் இன்னும் திரளான மக்களைத் தன் அன்பின் பாதையில் சேர்க்க அருள் புரிவாராக.
”அன்னை மரியா உங்களை எப்போதும் நடத்தி, வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை உறுதியாக்குவார்.” (ஏசாயா 58:11)
இறைவனின் மாறாத அன்பும், தாயின் அரவணைப்பும் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் பிரசன்னமாகி உங்களை என்றென்றும் காப்பதாக!
இனிய குருத்துவ தின நல் வாழ்த்துகள், அருட்பணி வின்சன் பற்றிக் அடிகளாரே!
யாழ் மறைமாவட்ட
புதிய ஆயரின்
புதிய நியமனங்கள்.
